×

பிரின்ஸ் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: பள்ளி தாளாளர் வாழ்த்து

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 240 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 112 மாணவர்களும், 128 மாணவிகளும் அடங்குவர்.  தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதால், அப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது.அனுஷ் ரஞ்சித் ரபீன் என்ற மாணவர் 600க்கு 582 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் வேதியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளார். ரங்கராஜன் என்ற மாணவர் 580  மதிப்பெண்களுடன், வணிகவியலில் நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
பார்கவி என்ற மாணவி 578 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறார். மேலும், பல்வேறு பாடப் பிரிவுகளில் 16 மாணவர்கள் நூறு சதவீத  தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வணிகவியலில் 7 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 4 பேர், காமர்சில் 3 பேர், கணிதத்தில் ஒருவர், வேதியியலில் ஒருவர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  550 மதிப்பெண்களுக்குள் 20 பேரும், 500க்குள் 63 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல் நங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 166 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 69 மாணவர்கள், 97 மாணவிகள்  அடங்குவர்.

ஆர்த்தி துர்கா என்ற மாணவி 600க்கு 582 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் காமர்ஸ், அக்கவுன்டன்சியில் தலா 100 மதிப்பெண் எடுத்துள்ளார். வர்ஷா 580  மதிப்பெண்களுடன் காமர்ஸ், அக்கவுன்டசி, பிசினஸ் கணிதம் போன்ற பாடங்களில் 100 மதிப்பெண் எடுத்துள்ளார்.பிரியதர்ஷினி என்ற மாணவி 580, ஹேமா தேசிகன் என்ற மாணவி 577 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் அக்கவுன்டன்சியில் 100 மதிப்பெண் எடுத்துள்ளார். இப்பள்ளியில் 19  பேர் பல்வேறு பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் அக்கவுன்டன்சியில் 9 பேர், காமர்சில் 6 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 3 பேர், பிசினஸ் கணிதத்தில் ஒருவர்  100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் கே.வாசுதேவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prince Matriculation Schools ,school writer , 100% pass , plus 2 exams,Prince Matriculation Schools,ongratulations , school writer
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...