×

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 புலி குட்டிகளை காண பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளை பெண் புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் கடந்த ஜனவரி 9ம் தேதி  3  குட்டிகள் பிறந்தது. அதில் 2 குட்டிகள் அடர் வரிகளை பெற்று, அதிக கருமை நிறத்தில் காணப்பட்டன. கரும்புலிகள் மிகவும் அரியது. அது ஒரு தனி இனமோ அல்லது  வேறு  வகையோ அல்ல. பொதுவாக பாலூட்டிகளி, அகவுடி எனும் நிறமி ஜீன் அல்லாத திடீர் மாற்றத்தால் வருகிறது. பொய்யான கருமை நிற புலிகள் அடர் கருமை வரிகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்து அதன் பழுப்பு நிற மஞ்சள் அடித்தளம் நமக்கு சிறியதாக மட்டுமே தெரியும்.  மற்றொரு பெண் குட்டி அதன் தாயின் நிறமான வெள்ளை நிறத்தில் உள்ளது.

உயிரியல் பூங்காவில் பிறந்து மூன்று மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளை நிற புலிக்குட்டிகளை அதன் தாய் நம்ருதாவுடன் பார்வையாளர்கள் காணும் வகையில் தனி  விலங்கு கூடத்தில் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை 28ஆக தற்போது உயர்ந்துள்ளது.கோடைக்காலத்தை முன்னிட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் பூங்கா நிர்வாகம் சார்பில் சில புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர்.  குறிப்பாக ‘பூங்கா கடை’ ஒன்று  திறக்கப்பட்டுள்ளது. அந்த கடையில் விலங்குகளின் படங்கள் பொறித்த நினைவு பொருட்கள், சாவிக் கொத்து, குல்லா, பனியன்கள் முதலான பொருட்கள் விற்பனை  செய்யப்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : viewers ,Arthritarian ,Anna Zoo , A special arrangement,audience, newly born, 3 tiger cubs , Arthritarian Anna Zoo
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்