×

அயர்லாந்தில் கலவரம் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

லண்டன்டெர்ரி: அயர்லாந்து நாட்டில் கலவரத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலில் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அயர்லாந்தின் வடக்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கலவர நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது கிரெக்கன் பகுதியில்  திட்டமிட்ட கலவரம் அரங்கேறியது. இது தொடர்பாக அட்லாண்டிக் இதழில் பணியாற்றி வரும் செய்தியாளர் மெக் கீ, கலவரம் குறித்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவு  செய்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த கார்கள் மற்றும் வேன்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் பட்டாசுகள், பெட்ரோல் குண்டுகள் போலீஸ் வாகனத்தின் மீது வீசப்பட்டது. அதில் வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைநத்து.

இதையடுத்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பத்திரிகையாளர் மெக் கீயை சுட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குடியரசு எதிர்ப்பு கொள்கை கொண்ட தீவிரவாதி என தெரியவந்துள்ளது. இதையடுத்து இதை  தீவிரவாத தாக்குதலாக கருதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : journalist ,Ireland , In Ireland, riot journalist, shot dead
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...