×

மக்கள் போராட்டத்துக்கு பணிந்து மாலி அரசு ராஜினாமா: விரைவில் புதிய அரசு

பாமாகோ: மாலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தால் எழுந்த நெருக்கடி காரணமாக பிரதமர்  சூமேலூ பூபேயே மாய்கா அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார். மாலி நாட்டின் மோப்டி அருகே உள்ள ஒகோஸ்சாகோ கிராமத்தில் கடந்த மார்ச் 23ம் தேதி புலானி இனத்ைத சேர்ந்த 160 பேர் கும்பலால் துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும்  கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் தோகன் பழங்குடியினர் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து மாலியில் அரசுக்கு எதிராக போராட்டங்கள்  வெடித்தன. இதனால், நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தொடர் வன்முறை சம்பவங்களை பிரதமர் கட்டுப்படுத்த தவறி விட்டதாக எதிர்கட்சிகள்  தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. கடந்த செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் இப்ராகிம் பாவ்பகார் கெய்டா, பிரதமர் பெயரை குறிப்பிடாமல் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்நிலையில்,  கடந்த புதனன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். பிரதமர்  மாய்காவும், அவருடைய  அரசும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்கள்.

இதனை தொடர்ந்து பிரதமர் மாய்கா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்தது. இவர்களின்  ராஜினாமாவை அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய பிரதமரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்  புதிய அரசு அமைப்பது குறித்து அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mali ,resignation ,struggle ,government , Mali's resignation , people's struggle, new government soon
× RELATED மாலி நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி