×

சட்ட விரோத அமைப்பாக ஏன் அறிவிக்கக் கூடாது? ஜமாத் இ இஸ்லாமிக்கு நோட்டீஸ்

ஸ்ரீநகர்: ‘உங்கள் அமைப்பை ஏன் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கக் கூடாது?’ என கேள்வி எழுப்பி, காஷ்மீரில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு சட்ட  விரோத தடுப்பு தீர்ப்பாயம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை  தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து,  காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.  இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க போதுமான காரணத்தை தீர்மானிப்பதற்காக  தீர்ப்பாயம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.இந்நிலையில், ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு இந்த தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘உங்கள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக ஏன் அறிவிக்கக் கூடாது?’  என கேட்டு, இந்த நோட்டீஸ் னுப்பப்படுகிறது. இந்த நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் இதை எதிர்த்தோ அல்லது இதற்கு பதில் அளிக்கும் வகையிலோ விளக்கம் தர  வேண்டும். ’ என்று கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jamaat , Why , proclaim ,illegal law, Notice, Jamaat-e-Islami
× RELATED பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம்