×

ராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது

புதுடெல்லி: நாடு முழுவதும் 3ம் கட்ட தேர்தலை சந்திக்க உள்ள 115 மக்களவை தொகுதிகளிலும், ஒடிசாவில் 42 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 95 தொகுதிகளில் கடந்த 18ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், அசாமில் 4, பீகாரில் 5, சட்டீஸ்கரில் 7, கோவாவில் 2, குஜராத்தில் 26, ஜம்மு காஷ்மீரில் 1, கர்நாடகாவில் 14, கேரளாவில் 20, மகாராஷ்டிராவில் 14, ஒடிசாவில் 6, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 5, தத்ரா மற்றும் நகர்ஹவேலியில் 1, டாமன் அண்ட் டையூவில் 1 என 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 115 மக்களவை தொகுதிகளில் வரும் 23ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம், ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் அடங்கும். இந்த தொகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. தேர்தலை முன்னிட்டு இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rally ,constituencies ,Wayanad , Rahul, rival, Wayanad, 115 block, propagate tomorrow
× RELATED கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு...