மாதவரம் ஜிஎன்டி சாலையில் பாம்பு படமெடுத்து ஆடியதால் பரபரப்பு

திருவொற்றியூர் : மாதவரத்தில் ஜிஎன்டி சாலை நடுவே இன்று காலை ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாதவரம் ஜிஎன்டி சாலையில், பொன்னியம்மன்மேடு சாலை சந்திப்பு அருகே இன்று காலை 7 மணியளவில், சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு நடுரோட்டுக்கு ஊர்ந்தபடி வந்தது. பின்னர் சாலையின் நடுவே அந்த நல்ல பாம்பு திடீரென படமெடுத்து ஆடியது.

இதை பார்த்ததும் மாதவரம் ஜிஎன்டி சாலை வழியே வாகனங்களில் சென்றவர்கள் நடுரோட்டில் பாம்பு படமெடுத்து ஆடுவதை கண்டு பயத்தில் உறைந்தபடி நின்றனர். ஒருசில ஆண்களும் பெண்களும் பாம்பை விரட்ட முயற்சிக்காமல், அதற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வருவதற்குள், நடுரோட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு சோர்வாகி, மெள்ள ஊர்ந்தபடியே சாலையோர புதருக்குள் சென்று மறைந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பாம்பு கடித்து பெண் பலி