×

4 தொகுதி இடைத்தேர்தலுக்கு 21-ம் தேதி விருப்ப மனு-அதிமுக அறிவிப்பு

சென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21-ம் தேதி விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலூரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளுக்கும், ஆண்டிபட்டி, பெரியகுளம், தஞ்சை, ஆம்பூர், உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளும் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. வரும் மே 19ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் உடன்பிறப்புகள், வரும் 21.4.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25,000 த்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே(21.4.2019) வழங்க வேண்டும் என கூறப்படுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,CPI (M) , 4 constituencies, the preferred petition for the mid-term election, the AIADMK announcement
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...