சென்னை: அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார். இவர் சசிகலா குறித்தும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்களுக்குச் சின்னம் கிடைப்பதில் கடைசி வரை கடும் இழுபறி இருந்தது. இறுதியாக நீதிமன்ற உத்தரப்படி அவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அ.ம.மு.க வை கட்சியாகப் பதிவு செய்யத் தயார் எனத் தினகரன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நடந்த உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் கட்சியின் எதிர்காலம் குறித்தும் இதில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இதன்பின் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார்.