×

கதையை திருடிட்டாங்க... அட்லி - விஜய் படத்திற்கு எதிராக குறும்பட இயக்குனர் வழக்கு

சென்னை: அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம், கதை திருட்டு வழக்கில் சிக்கி, பின்னர் வெளியானது . இந்தநிலையில், விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில், தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.

அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக பிரமாண்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay , Story, short film director, complaint
× RELATED அன்பு முத்தங்கள் குறைஞ்சி போச்சி..😂 | Maharaja Team Jolly Speech | Q&A | Vijay Sethupathi.