×

அமமுக-வின் பொதுச்செயலாளராகிறார் டிடிவி தினகரன்....அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய முடிவு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக அவர் அமமுகவின் துணை பொது செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்று வரும் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் இன்னும் 1 வாரத்திற்குள் அமமுக கட்சியை டி.டி.வி பதிவு செய்யவுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக, மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதிமுகவை உரிமைகோரிய வழக்கு காரணமாக இதுவரை அமமுகவை கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார். மேலும், இரட்டை இல்லை கட்சி சின்னம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரட்டை இலை சின்னத்தை ஆளும்கட்சியான அதிமுக கட்சிக்கே ஒதுக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தனது கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யட்டப்பட்டது. ஆனால் தனது கட்சியை பதிவு செய்யாத காரணத்தால் குக்கர் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தேர்தல் போட்டியிட சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தவிர கட்சியை பதிவு செய்த பின்னர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அசோக் நகரில் இருக்கக்கூடிய அமமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, இது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை தினகரன் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அமமுகவை கட்சியாக பதிவு செய்த பின்னர், அதிமுகவிற்கு உரிமை கோரிய வழக்கை இனி சசிகலா எதிர்கொள்வார் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DVV Dinakaran ,General Secretary , Amitabh, Party, Registration, TTV Dinakaran, General Secretary,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...