மு.க.ஸ்டாலின் முதல்வராவது நிச்சயம் ...தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், நீலாங்கரையில் உள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று வாக்களித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து, அதிகாலையில் இருந்து வரிசையில் காத்திருந்து உற்சாகமாக வாக்களித்தனர். அடுத்து திமுக ஆட்சிதான். ஏனென்றால் மகிழ்ச்சியோடும், பூரிப்போடும், உற்சாகத்தோடும் மாற்றத்தை நோக்கி வாக்களித்து விட்டு மக்கள் செல்வதை பார்க்கும்போது தெரிகிறது.

உதயசூரியன் உதிக்க போகிறது. ஸ்டாலின், தமிழக முதல்வராவது நிச்சயம். தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதேபோன்று 18 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம். நான், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>