×

வார்னர், பேர்ஸ்டோ அதிரடியால் வென்றோம்...ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன்

ஐதராபாத்: வார்னர், பேர்ஸ்டோ  அதிரடி, ரஷித்கான் சிறப்பான பந்து வீச்சு என எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டதால் இலக்கை எளிதில் எட்டி வெற்றிப்  பெற்றோம்’ என்று ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.சன் ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது. டோனி இல்லாமல்  களமிறங்கிய சென்னை அணிக்கு ஷேன் வாட்சன்- டு பிளெஸ்ஸி ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். ஆனால் அடுத்து வந்தவர்கள் ஐதரபாத் பந்துவீ–்சை சமாளிக்க முடியாமல்  ஆட்டமிழந்தனர். அதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐதராபாத்  டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையணாடினர். வார்னர் 50 ரன்னில் ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்தார். ஐதராபாத் 16.5 ஓவரில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், ‘  பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து வகைகளிலும் சிறப்பாக விளையாடினோம். சென்னை ஆரம்பத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தது. அதன் பிறகு நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ரஷித்கான் அருமையாக பந்து வீசினார். சென்னையின் இலக்கு நோக்கி வெற்றிகரமாக விளையாடினோம். வார்னர், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்’’ என்றார்.சென்னை அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா, ‘ நாங்கள் இன்னும் அடித்து விளையாடி இருக்க வேண்டும். அப்படி செய்யததால் 30 ரன்கள் குறைவாக எடுத்தோம். அதுதான் முடிவை மாற்றி விட்டது. இம்ரான் தாஹிர் அற்புதமாக பந்து வீசினார். எப்போதெல்லாம் விக்கெட் எடுக்க வேண்டுமோ அப்போதெல்லாம் பந்தை அவரிடம்தான் தருவோம். டோனி உடல் தகுதியுடன் இருக்கிறார். அதனால் அடுத்த போட்டியில் களமிறங்குவார்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Warner ,Berto ,Williamson ,Hyderabad , Warner, Bardo, Hyderabad, Capt. ,Williamson
× RELATED நியூசி. 162 ஆல் அவுட்