ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள  சர்பரஸ் அகமது தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இங்கிலாந்தில் மே 30ம் தேதி ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் ்போட்டியில் பங்கேற்க உள்ள நாடுகள் உலக கோப்பைக்கான அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலக கோப்பையில் விளையாட உள்ள  விக்கெட் கீப்பர்  சர்பரஸ் கான் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை நேற்று அறிவித்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முகம்மது அமீர், அசிப் அலி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகையில், ‘மே 23ம் தேதி வரை அணியில் மாற்றங்கள் செய்யலாம். அதனால்தான் இதுதான் இறுதியான அணி என்று கூற முடியாது’ என்று தெரிவித்துள்ளன. உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி ஜூன் 16ம் தேதி இந்தியாவுடன் விளையாட உள்ளது. முன்னதாக ஏப்.23ம் தேதி பாகிஸ்தான் அணி இங்கிலாந்து செல்கிறது. அங்கு உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்துடன் மே 5ம் தேதி ஒரு டி20 போட்டியிலும், மே 8 முதல் மே 19ம் தேதி வரை 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.அணி விவரம்: சர்பரஸ் அகமது(கேப்டன்/விக்கெட் கீப்பர்),  அபித் அலி, பாபர் அசம், ஃபாஹிம் அஷ்ரப், ஃபக்ஹர் ஜமான்,  ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இமத் வாசிம், இமாம்-உல் ஹக், ஜுனைத் கான், முகம்மது ஹபீஸ், முகம்மது ஹஸ்னைன், ஷதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிடி, ஷோகிப் மாலிப்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஆலோரை அணி வெற்றி