வாக்களித்துவிட்டு வெளியே வந்து செல்பி எடுத்த இளைஞர்கள்

சென்னை: வாக்களித்துவிட்டு வெளியே வந்து செல்பி எடுத்து இணையதளங்களில் பதிவு செய்வதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்தினர்.
வாக்குச்சாவடி மையத்துக்குள் செல்போன் எடுத்துச் செல்லவோ, செல்பி எடுக்கவோ அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனாலும், வாக்களிக்க வந்த பெரும்பாலானோர் செல்போன் கொண்டு வந்திருந்தனர். ஆனால், வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வந்த இளைஞர்கள் செல்போன் மூலம் ஓட்டுளித்ததற்கான அழியாத மை அடையாளமாக வைக்கப்பட்டு இருந்த விரலை செல்பி படம் எடுத்து பேஸ்புக், வாட்ஸ்அப்களில் போட்டு மகிழ்ந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களின் பிரச்னைகளுக்கு பாமக தொடர்ந்து போராடும்: ராமதாஸ் பேச்சு