×

எங்களுக்கு ஓட்டு போடலே... வேலை தர மாட்டோம்...: எம்எல்ஏ மிரட்டல்

பிரயாக்ராஜ்: குஜராத் மாநிலத்தில் தாகூத் மாவட்டத்தில் பதேபுரா எஸ்டி தொகுதி எம்எல்ஏ ரமேஷ் கடாரா, பா.ஜ.வுக்கு ஓட்டு  போடாவிட்டால் உங்களுக்கு வேலை கொடுக்க மாட்டோம் என்று கிராம மக்களை மிரட்டியுள்ளார்.தாகூத் மக்களவை தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக ஜஸ்வந்த்சிங் பாபோர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ஒரு கிராமத்தில்  பதேபுரா தொகுதி பா.ஜ. எம்எல்ஏ ரமேஷ் கடாரா பேசியதாவது: ஓட்டு உங்கள் ஆயுதம். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை  நீங்கள் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் நாங்கள் கண்காணிக்கிறோம். காங்கிரசுக்கு வாக்களித்தால்  உங்களுக்கு 100 நாள் வேலை உள்ளிட்ட எந்த வேலையும் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த பேச்சு சமூக  வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் டோஷி, மாநில தலைமை தேர்தல்  ஆணையர் முரளி கிருஷ்ணாவிடம் புகார் அளித்துள்ளார்.ஏற்கனவே பா.ஜ. எம்எல்ஏ மதுவத்சவ், ராஜ்காட் பா.ஜ. எம்.பி. மோகன்குண்டாரியா, குன்வாரிஜி பவாதியா ஆகியோர் பா.ஜ.வுக்கு  வாக்களிக்கா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA , Do ,vote for us, do not work, MLA intimidation
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்