×

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எங்குமே குண்டு வெடிக்கவில்லை: பிரதமர் மோடி பெருமிதம்

அம்ரேலி: குஜராத் மாநிலம், அம்ரேலி தொகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:சர்தார் படேலை தங்கள் தலைவர் என காங்கிரஸ் கூறினாலும், இதுவரை எந்த தலைவரும் குஜராத்தில் அமைக்கப்பட்ட படேலின்  பிரமாண்ட சிலையை பார்க்க வரவில்லை. உலகின் உயரமான சிலை என கூகுள் வெப்சைட்டில் தேடினால், குஜராத்தின் ஒற்றுமை  சிலை வரும். இது உங்களுக்கு பெருமையாக இல்லையா? நேருவை சிறுமைபடுத்துவதற்காக நான் படேல் சிலையை  அமைக்கவில்லை. படேலின் பெருமை மிக உயர்ந்தது. அதற்காக நீங்கள் அடுத்தவரை சிறியவராக பார்க்க முயற்சிக்க வேண்டாம். தீவிரவாதத்தை காஷ்மீரின் இரண்டரை மாவட்டங்களுக்குள் மட்டும் இருக்கும் வகையில் எனது அரசு கட்டுப்படுத்தியது. கடந்த 5  ஆண்டுகளில் நாட்டில் வேறு எங்கும் குண்டு வெடிக்கவில்லை.

குஜராத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம், சீனாவுடன் கடந்த 2017ம்  ஆண்டு ஏற்பட்ட டோக்லாம் பிரச்னையை தீர்க்க உதவியது. இது எனக்கு தேர்தல் பொதுக்கூட்டம் அல்ல. நான் பெற்ற வரவேற்புக்கு  குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம். எனது அரசு எடுத்த நடவடிக்கையால், பேச்சுவார்த்தை நடத்த முன்வாருங்கள் என  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுக்கிறார். சர்தார் சரோவார் திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன் நிறைவு  பெற்றிருந்தால், குஜராத் இன்னும் முன்னேறியிருக்கும். சுதந்திரத்துக்குப் பின் 2014ல்தான், காங்கிரஸ் மிகவும் குறைவான இடம்  பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இன்னும் கனவு காண்கிறது என்றார்.

‘காங்கிரஸ்-மஜத ஊழல் கூட்டணி’
கர்நாடக மாநிலம், சிக்கோடியில் நேற்று மாலை நடந்த பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸ்-மஜத ஊழல்  கூட்டணி. இந்த கூட்டணி அனைத்து விஷயங்களிலும் தனித்தனி கொள்கை கொண்டவை. ஆனால் பதவிக்காக, ஊழல் செய்வதற்காக  ஒன்றிணைந்து தேசத்தை பற்றியும் என்னைப் பற்றியும் குறை கூறி வருகிறது. கஷ்டப்படுபவர்கள் தான் ராணுவத்தில் சேர்வார்கள்  என்று முதல்வர் குமாரசாமி நமது வீரர்கள் பற்றி கீழ்த்தரமாக பேசியுள்ளார்.  தேவகவுடா குடும்பத்தை பொது வாழ்க்கையில் இருந்து  மக்கள் தூக்கி வீச வேண்டும். பாரத் மாதா கி ஜெய் என்று சொல்பவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா அல்லது நாட்டை துண்டு  துண்டாக்க நினைப்பவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? என்று பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,anywhere ,India , There ,no blast anywhere, India , past five years,Prime Minister Modi,proud
× RELATED நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதுகிறார்...