×

காரைக்குடியில் வரிசையில் நிற்காமல் எச்.ராஜா ஓட்டுப்பதிவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மகரிஷி பள்ளியில் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில்  காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர். காலை 9.10 மணியளவில் சிவகங்கை தொகுதி பாஜ வேட்பாளரும், அக்கட்சியின் தேசியச்  செயலருமான எச்.ராஜா குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்தார்.அங்கு வரிசையில் நிற்காமல், குடும்ப உறுப்பினர்களுடன் அதிரடியாக வாக்குசாவடிக்குகள் நுழைந்து வாக்களித்தார். அவர்கள்  வாக்களித்து செல்லும் வரை மற்றவர்களை தேர்தல் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் 20 நிமிடம் வாக்காளர்கள்  காத்திருந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஜனநாயக முறைப்படி வரிசையில் நின்றுதான் வாக்களிக்க வேண்டும். ஆனால், பாஜ  வேட்பாளர் எச்.ராஜா, குடும்ப உறுப்பினர்களை வாக்குச்சாவடிக்கு உள்ளே அழைத்து சென்று அடாவடித்தனமாக வாக்குப்பதிவு செய்தார்.  இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : H.Raja ,Karaikudi , H.Raja ,quotation ,without standing, Karaikudi line
× RELATED புதுச்சேரியில் நாளை டாஸ்மாக்...