×

பூத் சிலிப் இருந்தும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் கடலோர கிராமங்களில் ஏராளமான வாக்காளர்கள் பெயர் இல்லை: அடுத்தடுத்து முற்றுகைகளால் பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், பூத் சிலிப் கிடைக்கப்பெற்றும் வாக்குசாவடியில் இருந்த பெயர் இல்லாததால் பல ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நேற்று காலையில் வாக்குபதிவு தொடங்கியவுடன் கடலோர கிராமங்கள் மற்றும் சிறுபான்மை வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குசாவடிகளில் வாக்காளர்கள் பெயர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்தது. மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடிகளில் நேற்று காலை வாக்களிக்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். கையில் பூத் சிலிப்புடன் வந்தவர்களிடம், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி வாக்குசாவடி அலுவலர்கள், 200 பேரை திருப்பி அனுப்பினர்.

இதனால்,  பூத் சிலிப் வினியோகம் செய்து கொண்டிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கல்குளம் தாசில்தார் ராஜாசிங் வந்து விசாரணை நடத்தினார். அப்போது கூடுதல் வாக்காளர் பட்டியல் இணைப்பு பட்டியல் உள்ளதா? என்று விசாரணை நடைபெற்றது. ஆனால் பூத் சிலிப் வைத்திருந்தவர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனை போன்று முட்டம் சகல புனிதர்கள் மேல்நிலைபள்ளியில் உள்ள வாக்குசாவடியில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்காளர்கள் வாக்குசாவடி முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். தங்களுக்கு பூத் சிலிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு எப்படி பெயர் இல்லாமல் போகும் என்று கேள்வி எழுப்பினர்.

அந்த நேரத்தில், அதிமுக- பாஜகவினர் வந்தனர். அவர்களிடம், நீங்கள் ஓட்டு கேட்டு வருகிறீர்கள், ஆனால் எங்களுக்கு வாக்குகளே இல்லை, தேர்தலுக்கு முன்பே வாக்காளர் பட்டியலை நீங்கள் பார்த்து சரி செய்யவில்லை’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே, போலீசார் வந்து வாக்காளர்களை அப்புறப்படுத்தினர். இதனைபோன்று பத்மநாபபுரம் தொகுதியில் 200 பேரும், ராஜாக்கமங்கலம் துறை பகுதியில் 100 பேரும் வாக்காளர் பட்டியலில் பெயர் என்றுகூறி வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனை போன்று நாகர்கோவில், இடலாக்குடி, இளங்கடை பகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் 60க்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டிருந்தது.

சிறுபான்மையினர், மீனவர்கள்: குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்ற இடலாக்குடி, மணவாளக்குறிச்சி, தக்கலை, மீனவர்கள் அதிகம் வசிக்கின்ற ராஜாக்கமங்கலம் துறை, முட்டம், தூத்தூர் போன்ற இடங்களில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் கொத்துகொத்தாக வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.் இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Booth Chile ,villages ,voters , Booth Chile, voting, unable, disappointing, coastal village, name, no
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...