×

நீங்க இறந்துட்டீங்க வாக்களிக்க முடியாது: அதிகாரிகள் கூறியதால் வாக்காளர் தர்ணா

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் டவுன் பஜார் பகுதியை சேர்ந்தவர் அசக் மைதீன் (45). இவர் நேற்று முதுகுளத்தூரில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 174ல் வாக்களிக்க சென்றார். அப்போது மையத்தில் இருந்த அதிகாரிகள் அவரது பெயர் பட்டியலில் இல்லை. இறந்து விட்டார் என்று இருப்பதாக கூறி வாக்களிக்க முடியாது என்றனர்.

உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த அசக் மைதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரிடம் சமரசம் பேசினர். ஆனாலும் அவர் வாக்குச்சாவடி மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். பிறகு அவரது உறவினர்களை அழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : voter darna , You, die, vote, can not, officers, voter, darna
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்