ஓட்டு போடுவதற்காக விமானத்தில் இருந்து பறந்து வந்து மலேசிய சகோதரிகள் சென்னையில் வாக்களித்தனர்: உரிமையை நிலைநாட்டியுள்ளோம் என்று பெருமிதம்

சென்னை: மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்து சென்னை வாக்குசாவடியில் சகோதரிகள் வாக்களித்தனர். அவர்கள்  தங்களின் உரிமையை நிலை நாட்டியுள்ளோம் என்று பெருமிதம் கொண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்லினா, அப்ரினா. இவர்கள் இரண்டு பேரும் சகோதரிகள். 2  பேருக்கும் திருமணமாகி மலேசியாவில் வசித்து வருகின்றனர். மலேசியாவில் இருந்தாலும் அவர்களது வாக்கு இன்னமும்  மயிலாப்பூரில் சட்டமன்ற தொகுதியில்தான் உள்ளது. இந்த நிலையில் அவர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக  மலேசியாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் உள்ள  மாநகராட்சி பள்ளியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். வாக்களித்த பின்னர் அஸ்லினா, அப்ரினா ஆகியோர் அளித்த பேட்டியில், “ திருமணம் ஆகி மலேசியாவில் செட்டில்  ஆகியிருக்கிறோம். எவ்வளவோ விஷயத்துக்கு செலவு பண்றோம். இதற்கு கண்டிப்பாக செலவு செய்து, வாக்களிக்க செல்ல வேண்டும்  என்று முடிவு செய்தோம். செலவை பொருட்படுத்தாமல் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தோம். சென்னை வந்ததும் முதல்  வேலையாக 2 பேரும் சென்று ஓட்டு போட்டோம். ஓட்டு போட்டதில் ரொம்ப மகிழ்ச்சியடைகிறோம். ஓட்டு போட்டதில் எங்களுக்கு  ரொம்ப திருப்தி. எங்கள் உரிமையை நிலை நாட்டியுள்ளோம்” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: