×

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 85 வயது முதியவர் கன்னியப்பன் முதல்முறையாக வாக்களித்தார்

திருவண்ணாமலை: 85 வயதில் முதல்முறையாக வாக்களித்த முதியவர் கன்னியப்பனை கௌரவப்படுத்தியுள்ளார் ஆட்சியர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை அழைத்து வர ஏற்பாடு செய்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர். 85 வயது முதியவர் கன்னியப்பன் வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களித்து உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். சிறுவயதில் இருந்தே கொத்தடிமையாக சிக்கிக் கொண்டதால் கன்னியப்பன் வாக்களித்ததே இல்லை. கன்னியப்பனை கொத்தடிமைப் பிடியில் இருந்து அண்மையில் மீட்டது மாவட்ட நிர்வாகம். கொத்தடிமைக் கொடுமையில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து மருதாடு கிராமத்தில் வாக்களித்தார் கன்னியப்பன். கன்னியப்பன் குடும்பத்தை சேர்ந்த மேலும் 7 பேரும் முதல் முறையாக வாக்களித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (85) ஆவார். திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் கொத்தடிமைகளாக இருந்த 50 பேரை வருவாய்த்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீட்டனர். கொத்தடிமையாக வாழ்ந்த அனைவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீரம்பாக்கம் என்கிற கிராமத்தில் நிலக்கரி தயாரிக்கும் பகுதியிலிருந்து மீட்கப்பட்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மருதநாடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் (85) என்பவரின் குடும்பமும் ஒன்று. கன்னியப்பனிடம் அரசியல் தலைவர்கள் குறித்து கேட்ட போது எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவைத் தெரிகிறது. ஆனால் தற்போது யார் முதல்வர் என்பது தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanniyappan ,time , Kanniyappan, polling
× RELATED பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை