×

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பாண்டுரங்கன்.....நியாயம் இல்லை

நான் எந்த தவறும் செய்யவில்லை. மாவட்ட நிர்வாகமும் என் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. வாக்காளர்களுக்கு நான் பணம் கொடுக்கவும் இல்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எனக்கு எந்த விதமான  ஆட்சேபனையும் இல்லை. ஒரு பாவம் அறியாத நானும் இதில், பாதிக்கப்பட்டுள்ளேன். நான் கடந்த 1 மாதமாக வெயில் என்றுகூட பாராமல் கடுமையாக பிரச்சாரம் செய்தேன். நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். தேர்தல்  விதிமுறைகளுக்கு உட்பட்டு செலவு செய்து,வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டேன். என் மீது எந்த விதிமீறல் வழக்கும் பதிவு இல்லை. எந்த தவறு செய்யாத நானும் தேர்தல் ரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.  தேர்தலை முழுமையாக ரத்து செய்து இருப்பது எந்த வகையில் நியாயம்.நான் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எனது கட்சியினர் துண்டு, சால்வை அணிவிக்கின்றனர். அதை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றுகின்றனர்.

தேர்தல் அதிகாரிகள், இப்படி கொண்டு செல்வது சரியில்லை என்று கூறுகின்றனர்.  அதற்கு, நான், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது, கட்சியினர் சால்வை, மாலை அணிவிக்கின்றனர். நான் என்ன செய்வது என்று அவர்களிடம் கேட்டேன். ஆனால், தேர்தல் அதிகாரிகள், இல்லையே வண்டியில் இப்படி  கொண்டு செல்லக்கூடாது என்று பறிமுதல் செய்தனர். அப்போது, நான், கோடி,கோடியாக வண்டியில் பணம் எடுத்து செல்பவர்களை விட்டு விடுங்கள், சால்ைவ, துண்டு எடுத்து செல்வதை பறிமுதல் செய்யுங்கள் என்று  கேட்டேன். அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. இதன் மூலம் தேர்தல் ஆணையத்தை நடவடிக்கை பற்றி புரிந்து கொள்ளுங்கள். இதுவே ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நான் தவறு செய்யவில்லை. நான் தண்டிக்கப்பட்டு இருக்கிறேன். தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது என்ன நியாயம். ஒரு மாதம் ஊர்,ஊராக அலைந்து பிரச்சாரம் செய்து  இருக்கிறேன். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நேரத்தில் தேர்தலை ரத்து செய்வது எந்த விதத்தில் நியாயம்.

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான காந்தி....அநியாயமான செயல்
வேலூர் மாவட்டம் ேசாளிங்கர் சட்டசபை தொகுதியில் ஆளும் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு தலா ரூ.2 ஆயிரம் வாக்காளர்களுக்கு பணம் தருகின்றனர். அந்த பணம் எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.  அவர்கள் பணம் கொடுப்பதாக புகார் தந்தால் சோதனை செய்வது இல்லை. அதே நேரத்தில் நாம் தினமும் பறக்கும் படை எங்கெங்கு சோதனை நடத்துகின்றனர் என்பதை பார்க்கிறோம்.  திமுக மகளிர் அணி செயலார் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தனர். கேட்டால் தகவல் வந்தது  என்கிறார்கள். இதே தகவலை நாங்கள் பலமுறை கொடுத்தும் யாருமே சோதனை நடத்த வரவில்லை. இதே போன்று எதிர்க்கட்சி வேட்பாளர்களை குறி வைத்தே பறக்கும் படை சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை  இல்லாத வகையில் வருமான வரித்துறையை ஏவி இந்த சோதனை நடத்தி வருகின்றனர். தோல்வி பயம் காரணமாக இது போன்று வருமான வரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகள் என்னவெல்லாம்  செய்ய முடியுமோ அதை  செய்கின்றனர்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எங்கேயோ ஒரு குடோனில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வேண்டுமென்றே எங்களது வேட்பாளரை தொடர்புபடுத்தி வருமான வரித்துறை அறிக்கை அனுப்பி  வைத்துள்ளது. ஒரு வேளை அந்த குடோனில் அவர்களே பணத்தை வைத்து விட்டு எடுத்து செல்கின்றனரா என்ற சந்தேகம் உள்ளது. வருமான வரித்துறை செயல்பாடுகளை பார்க்கும் போது நமக்கு அப்படித்தான் தெரிகிறது.ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு போலீஸ் வேனில் பணம் எடுத்து செல்கின்றனர். ஆனால், அதை யாரும் தடுக்கவில்லை. அவர்களை வருமான வரித்துறை பிடிப்பதில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி விட்டது. இதுவரைக்கும் இந்த மாதிரி ஆட்சியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட்டதில்லை. ஆனால், இப்போது மோடி ஆட்சியில் வருமானவரித்துறை தேர்தல்  ஆணையத்தை ஆட்டுவிக்கிறது. மோடியின் ஆட்டத்தில் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை  குறி வைத்தே வேலை செய்து வருகிறது.  வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்  வேண்டுமென்று சிலர் திட்டமிட்டு செய்துள்ளனர். வேலூரில் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை நிறுத்தியது அநியாயமான செயல்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,candidate ,minister , Vellore parliamentary ,candidate,, Former minister Pandurangan ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!