×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரை இறுதியில் பார்சிலோனா: மெஸ்ஸி அசத்தல்

கேப் நோ: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட எப்சி பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் நடந்த முதல் கட்ட கால் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று பார்சிலோனா அணி முன்னிலை வகிக்க, இரண்டாம் கட்ட கால் இறுதி ஆட்டம் கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்திலேயே நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 16வது மற்றும் 20வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்த, பார்சிலோனா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோடின்யோ (61வது நிமிடம்) அபாரமாக கோல் போட்டார். பதில் கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைட்டட் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

ஆட்ட நேர முடிவில் 3-0 என வென்ற பார்சிலோனா, 4-0 என்ற மொத்த கோல் அடிப்படையில் அரை இறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது.
ஜுவென்டஸ் ஏமாற்றம்: அஜாக்ஸ் அணியுடன் நடந்த மற்றொரு கால் இறுதியில் (2ம் கட்டம்), நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நம்பி களமிறங்கிய ஜுவென்டஸ் அணி 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. ரொனால்டோ 28வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்த, அஜாக்ஸ் சார்பில் வான் டி பீக் (34’), டி லைட் (67’) கோல் போட்டனர். முதல் கட்ட கால் இறுதி 1-1 என டிராவில் முடிந்திருந்ததால், அஜாக்ஸ் 3-2 என்ற மொத்த கோல் அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Champions League ,football semi-final ,Barcelona ,Messi , Champions, League, Football, Semi Final, Messi, Wacky
× RELATED சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில்...