×

சத்ருகனின் மனைவி லக்னோவில் போட்டி: ராஜ்நாத் சிங்கை வீழ்த்த களமிறக்கியது சமாஜ்வாடி

லக்னோ தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து நடிகர் சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்காவை சமாஜ்வாடி களமிறக்கி உள்ளது.பாஜ தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இம்முறை பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் வாய்ப்பு தரப்படவில்லை. கடந்த 2014ல் இங்கு சத்ருகன் சின்கா வெற்றி பெற்று எம்பி.யான  நிலையில், இம்முறை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் களமிறக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சத்ருகன், பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவர், இக்கட்சி சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில்  போட்டியிடுகிறார்.இந்நிலையில், சத்ருகனின் மனைவியும், நடிகையுமான பூனம் சின்கா, சமாஜ்வாடி கட்சியில் நேற்று முன்தினம் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு லக்னோ தொகுதியில் சீட் தரப்பட்டுள்ளது. இத்தொகுதியில்  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து பூனம் சின்கா போட்டியிடுகிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shatrughan ,Lucknow ,Samajwadi ,Rajnath Singh , Shatrughan's wife , Lucknow, Samajwadi, fight Rajnath Singh
× RELATED கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த 4...