×

பாரிமுனை, மண்ணடி லாட்ஜ்களில் அதிரடி சோதனை

பெரம்பூர்: தமிழகம் முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை நகரில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனரா? என்பது குறித்து பாரிமுனை, மண்ணடி, சென்ட்ரல், பெரியமேடு, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள விடுதிகள், தனியார் மேன்சன்களில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மண்ணடி, எஸ்.எஸ்.ராமசாமி தெருவில் ஒரு தனியார் லாட்ஜில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு தென்காசியை சேர்ந்த நாகூர் மொய்தீன் (32) என்பவர் தங்கி இருந்தார். அவர் வைத்திருந்த ரூ.3.50 லட்சம் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் இருக்கும் லாட்ஜ்கள், தனியார் மேன்சன்களில் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனரா என போலீசார்  தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Action test ,Mani Lodges , Parody, sandalwood, lodge, action, test
× RELATED சாலையோர வியாபாரியை தாக்கிய எஸ்ஐக்கு...