×

ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் பகுதி வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்த மின்னணு இயந்திரங்கள்: கமிஷனர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு

பெரம்பூர்: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு, இப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் பணி நேற்று காலை துவங்கியது. ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய 3 பகுதி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த இயந்திரங்கள் அனைத்தும் துணை ராணுவம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மினி லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.

அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக, முக்கிய சாலைகள், வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை இன்று காலை முதல் தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக பார்வையிட்டு சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்குவார் என கூறப்படுகிறது.

மேலும் வடசென்னையில் பதற்றமான வாக்கச்சாவடி மையங்களில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சியினரிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் விதமாக பகுதி முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடசென்னை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் ராயபுரம் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vishwanathan ,voting centers ,Raipur ,Vyasarpadi ,Perambur , Raipuram, Vyasarpadi, Perambur, voting, electronic machinery, commissioner, study
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!