×

சாத்தூர் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன் வீட்டில் ஐ.டி ரெய்டு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையில் உள்ள அமமுக வேட்பாளர் சுப்பிரமணியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன் தோட்டத்தில் ரூ.33 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எஸ்.ஜி. சுப்பிரமணியனின் எதிர்கோட்டை அலுவலகத்தில் ஏற்கனவே ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தோட்டம் மற்றும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து ரூ. 43 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் ஆண்டிப்பட்டி உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் பணப்பறிமுதல் வேட்டையை பறக்கும் படையினரும் வருமான வரித்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பணபட்டுவாடா புகார் எழுந்ததை தொடர்ந்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன் அலுவலகம், தோட்டம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். எஸ்.ஜி. சுப்பிரமணியனின் எதிர்கோட்டை அலுவலகத்தில் உள்ள மறைத்து வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பணத்தை தேர்தல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அங்கு இருந்த மகாதேவன் என்பவரை கைது செய்து ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, தோட்டத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எதிர்கோட்டை உள்ள எஸ்.ஜி. சுப்பிரமணியனின் மாமனார் வீட்டு தோட்டத்தில தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரூ.33 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மகாதேவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SG Subramaniam ,Sattur Amma , Raid , Sattur Ammk candidate, SG Subramaniam home
× RELATED தமிழ்நாட்டில் மழைக்கால...