மும்பை அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் பணியிடமாற்றம்... நீரவ்மோடி வழக்கை விசாரித்து வந்த அதிகாரியை விதிமுறையை மீறி நீக்கியதால் நடவடிக்கை

மும்பை: மும்பை அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் வினீத் அகர்வால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நீரவ் மோடியின் வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை இணை இயக்குநரை, சிறப்பு இயக்குநர் வினீத் அகர்வால் விதிமுறையை மீறி நீக்கியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மும்பை அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக பதவியேற்ற, ஐபிஎஸ் அதிகாரி வினீத்குமாரின், பதவிக்காலம் 3 ஆண்டுகள் குறைக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் அனுமதிக்கு பின்னர் மத்திய நிதி அமைச்சகமும், அமலாக்கத்துறை தலைமை அலுவலகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.வினித் அகர்வாலின் பணிகளை, கூடுதலாக சென்னை அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் கவனிப்பார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : removal ,Mumbai Enforcement Directorate , Mumbai, Enforcement Director, Special Director, Workplace, Water Resources,
× RELATED பாஜக ஆட்சியில் மிகப்பெரும்...