×

ராஜஸ்தான், ம.பி., குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெளுத்துவாங்கிய கோடை மழை...... 31 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் திடீரென பெய்த கொடை மழையில்  சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதேபோல் மத்தியபிரதேசத்தில் புயல் மழையில் சிக்கி, கடந்த 2 நாட்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டிவதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த கோடை மழையினால் பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கோடை மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமருக்கான தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் இதில் காயமடைந்தவர்கள் தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : North ,Gujarat ,Rajasthan ,Madhya Pradesh , rain, thunderstorm, Rajasthan, Madhya Pradesh, Gujarat
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...