×

மண்பாண்ட தொழிலாளர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: சேம.நாராயணன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தலைவரும், முன்னாள் வாரிய தலைவருமான சேம.நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவை தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கும் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.  தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் முழுவதும் ரத்து, நீட் தேர்வு ரத்து, வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறிவித்திருக்கிறது. எனவே, மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cotton workers ,alliance ,DMK ,Same.Narayanan , Cotton workers, DMK alliance, Same.Narayanan
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி