×

ஜெர்மன் துணை தூதரகத்தில் விசாவுக்கு போலி ஆவணம்: பொறியாளர் கைது

சென்னை: போலி ஆவணம் சமர்ப்பித்து ஜெர்மன் துணை தூதரகத்தில் விசா பெற முயன்ற கேரளாவை சேர்ந்த பொறியாளரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் நாகப்புழா அடுத்த கீழக்கேது அவுஸ் பகுதியை சேர்ந்தவர் விது (38). பொறியாளரான இவர், பணி தொடர்பாக ஜெர்மன் நாட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதற்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஜெர்மன் துணை தூதரகத்தில் விசாவுக்காக மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி ஜெர்மன் துணை தூதரக அதிகாரிகள் நேர்முக தேர்வுக்கு நேற்று முன்தினம் விதுவை அழைத்திருந்தனர். அதன்பேரில், விது தூதரகத்தில் ஆஜரானார். அப்போது, விசாவுக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து துணை தூதரக அதிகாரி கொர்லியா வெகிலா (59) இதுபற்றி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கேரள பொறியாளர் விதுவை கைது ெசய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : German ,engineer , German diplomat , fake document , visa, engineer arrested
× RELATED உடல் பருமன் குறைப்பு...