×

சபரிமலை குறித்து பேசி விதிமுறையை மீறிய மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம் கடிதம்

புதுடெல்லி: ‘சபரிமலை குறித்து பேசி தேர்தல் நடத்தை விதியை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தேர்தல் ஆணையத்துக்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம் எழுதியுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்தாண்டு செப்டம்பர் 28ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், சபரிமலை குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது பேச அனைத்து கட்சிகளுக்கும் தடை விதித்தது.

இந்நிலையில், சமீபத்தில் தேனியில் நடந்த பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், முஸ்லிம் லீக் கட்சியும் ஆபத்தான விளையாட்டை விளையாடியதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, சபரிமலை குறித்து பேசி தேர்தல் நடத்தை விதியை மோடி மீறியதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நிலோத்பால் பாசு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘சபரிமலை குறித்தோ, ஐயப்பன் குறித்தோ பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை பிரதமர் மோடி மீறியுள்ளார். இதனால், அவர் தேர்தல் நடத்தை விதியை மீறியது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Sabarimala ,CPM ,Election Commission , Sabarimala, Rule, Modi, Action, Election Commission, CPM, Letter
× RELATED ஆக்சிலேட்டருக்கு பதிலாக பிரேக்கை...