×

பிரசார தடை நடவடிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு: மாயாவதி மனுவையும் நிராகரித்தது

புதுடெல்லி: மக்களவை தேர்தல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், ஷார்ஜாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான யோகா ஆசிரியை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள், ஜாதி, மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் ஆதாயத்துடன் பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய உபி முதல்வர் யோகி, மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோ்ருக்கு 2 நாளும், ஆபாசமாக பேசிய சமாஜ்வாடி கட்சி  மூத்த தலைவர் அசம்கானுக்கு 3 நாளும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாயாவதி வழக்கு தொடர்ந்தார்.

அதில், தொடர்ந்து பிரசாரம் செய்ய அனுமதிக்கும்படியும் கோரினார். இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வதற்கு அது தடை விதித்துள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கிறது,’ என்று தெரிவித்தது.  மேலும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் மனுவையும் நிராகரித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Mayawati , Prohibition, ban, action, Supreme Court, Mayawati petition
× RELATED மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு...