×

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: மகாவீரர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமண சமயத்தை பின்பற்றும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
பகவான் மகாவீரர் பிறந்த தினம் மகாவீரர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அகிம்சையே தர்மமாகும், எந்த ஜீவனையும் கொல்லாதே, எவரையும் சார்ந்திராதே, எவரையும் அடிமைப்படுத்தாதே என்பதே பகவான் மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவக் கொள்கையாகும்.

மனித வாழ்வு மேன்மையுற, பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை மக்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும். மகாவீரரின் உயரிய போதனைகளை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி அன்பும், அறமும் நிறைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ‘‘மகாவீரர் ஜெயந்தி’’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

கவர்னர் வாழ்த்து
தமிழக கவர்னர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயின் சகோதரர்களுக்கு மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் பழமையான சீவகசிந்தாமணி, வலையாபதி ஆகியவற்றில் ஜெயின் துறவிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. அவரது வலியுறுத்தல் அறநெறி மற்றும் வன்முறையற்ற பாதையை குறிப்பதாக உள்ளது. இறைவன் மகாவீரரால் வழிநடத்தப்பட்டு சகிப்புத்தன்மையை நடைமுறைப்படுத்த தீர்மானிப்போம். மேலும் பரஸ்பர மற்றும் நல்லொழுக்க பாதையை நம் அன்றாட வாழ்வில் கடைபிடிப்போம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi ,Mahaveer Jayanti , Mahaveer Jayanti, Chief Minister, Edappadi, greetings
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்