ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள உதம்பூர் மக்களவை தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் வாக்குரிமை 16.85 லட்சம் வாக்காளர்களிடம் உள்ளது. இந்த தொகுதியின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், கிஷ்த்வார், தோடா, ராம்பன், ரியாசி, உதம்பூர், காத்வா ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளில் பரவி உள்ளதாக அமைந்துள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 2,710 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. பா.ஜ.வின் தற்போதைய எம்பி ஜிதேந்திர சிங், காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்யா சிங் (மகாராஜா ஹரிசிங்கின் பேரன்) உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர்.