×

திசை மாறிய பறவைகள்....சமாஜ்வாடியில் சேர்ந்தார் சத்ருகன் சின்கா மனைவி

பீகாரில் உள்ள பாட்னா சாகிப் தொகுதியில் பாஜ எம்பி.யாக இருந்த நடிகர் சத்ருகன் சின்கா, பிரதமர் மோடியையும், கட்சியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனால், பாஜ அவருக்கு சீட்  கொடுக்கவில்லை.இதையடுத்து அவர் காங்கிரசில் இணைந்தார் சத்ருகன். தற்போது, இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.சத்ருகனின் மனைவி பூனம் சின்கா. கணவன் காங்கிரசுக்கு போனதும், இவர் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து சமாஜ்வாடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின்  மனைவியும், கன்னூஜ் தொகுதி எம்பி.யுமான டிம்பிள் யாதவ் முன்னிலையில் பூனம் சின்கா சமாஜ்வாடியில் இணைந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.
ராஜ்நாத்தை எதிர்த்து போட்டி?: பூனம் சின்காவுக்கு லக்னோவில் போட்டியிட சமாஜ்வாடி வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், இத்தொகுதியின் பாஜ வேட்பாளரான  மத்திய அமைச்சர் ராஜ்நாத்  சிங்கை எதிர்த்து அவர் போட்டியிடுவார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samajwadi ,Sathrukan Sinha , Direcrated ,birds, Samajwadi ,Sathrukan Sinha,wife
× RELATED விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையில் உறுதி