×

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும்: சத்யபிரத சாகு

சென்னை: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் மீண்டும் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். வருமானவரித்துறை மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கை அடைப்படையில் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சத்யபிரத சாகு பேட்டியளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ampoor ,Vellore district ,election ,Gudiyatham ,Satyabrata Sahu , Satyabrata Sahu, Ambur, Gudiyatham
× RELATED வேலூர் மாவட்டத்தில் மேலும் 87 பேர் கொரோனா