சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலைக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் வரும் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்த துணை ராணுவம், போலீசார் என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமி தினத்திலேயே, பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதனால் தேர்தல் மற்றும் சித்ரா பவுர்ணமி என்று தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமிக்கு முத்தரசி, ஷியாமளா ஆகிய 2 சிறப்பு எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில், கிரிவலம், போக்குவரத்து என்று 3 ஆக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் கோவிலுக்கு மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சித்ரா பவுர்ணமிக்கு மட்டும் தனியாக 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று டி.ஐ.ஜி வனிதா தெரிவித்தார். சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலைக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை செல்ல 61 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. மேலும் காவல் உதவி மையங்கள் அமைத்து பக்தர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 108 ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvannamalai Yatra ,Chitra Poornima , 2895,special buses,Tiruvannamalai Yatra, Chitra Poornima
× RELATED விதிமுறைகளை மதிக்காமல் நிறுத்தத்தில் நிற்க மறுக்கும் அரசு பஸ்கள்