×

வெண்ணந்தூர் அருகே கடும் வறட்சியால் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் அடுத்துள்ளது கல்கட்டானூர் ஏரி. இந்த ஏரிக்கு சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் திருமணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம் மற்றும் சுற்றுவட்டார ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த ஏரிகளில் மீன்கள் வளர்க்க குத்தகைக்கு விடுவது வழக்கம். கல்கட்டானூர் ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைக்காரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதால், ஏரியில் தண்ணீர் வற்றி வருகிறது.

மேலும், தண்ணீர் வெப்பமாகி, தண்ணீர் இல்லாமல் மீன்கள் செத்து மிதக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் தண்ணீர் முழுவதும் வற்றி, அனைத்து மீன்களும் இறந்து விடும். செத்து மிதக்கும் மீன்களால் தற்போது ஏரியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஏரி குத்தகைதாரர்களுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake ,droughts ,Vellandur , Vennantur, drought, fish
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...