×

வால்பாறை ரோட்டில் உலாவரும் வரையாடுகள் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆடுத்த ஆழியார், நவமலை, சர்க்கார்பதி வனப்பகுதியில்  குரங்கு, வரையாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதில், ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் வரையாடுகள் அதிகளவில் கண்ணில் தென்படுகிறது. வனத்தில் இருந்து வெளியேரும் வரையாடுகள் சாலையோரம் மேய்ந்து செல்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், விலங்குகள் இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. அதிலும், வால்பாறை ரோட்டில் 8 மற்றும் 9வது வளைவுகளில் வரையாடுகள் சாலையோரம் அதிகளவு கடந்து செல்கிறது. அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் அதை பார்த்து ரசிக்கின்றனர்.

இருப்பினும், வால்பாறை சாலையில் அதிவேகமாக வரும் சாலையை கடக்கும் விலங்குகள், சிலநேரத்தில் விபத்தில் சிக்கிகொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாகனங்களை சுற்றுலா பயணிகள் மெதுவாக இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பகுதிகளில் வனவிலங்குகளின்  நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இதில் ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் ரோட்டில் வரையாடுகள் நடமாட்டம் உள்ளது. வாகனங்களில் செல்வோர் வேகத்தை  குறைக்க வேண்டும். மேலும் வாகனங்களை விட்டு இறங்கி விலங்குகளை தொந்தரவு  செய்யகூடாது. அவ்வாறு தொந்தரவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Travelers ,Wall Street Route , Valparai, wild goats, tourists
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...