×

தேசிய மாநாட்டு கட்சி பிரசாரம் பரூக் அப்துல்லா பதிலடி நாட்டை பிளவுபடுத்த மோடி முயற்சி

ஸ்ரீநகர்: ‘‘நாட்டை பிளவுப்படுத்த மோடிதான் முயற்சிக்கிறார்’’ என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீரின் கதுவா மாவட்டதில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘‘காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என உமர் அப்துல்லா கூறுகிறார். அப்துல்லா மற்றும் முப்தி குடும்பங்கள் காஷ்மீரில் 3 தலைமுறையை நாசாமாக்கி விட்டன. இவர்களை நாட்டை பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன்’’ என கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்ரீநகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது:
நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர் மோடிதான். அதில் அவர் வெற்றி பெற முடியாது. இந்து, முஸ்லிம் என அனைத்து மக்களின் உரிமைகளுக்காவும் எனது கட்சி போராடுகிறது. என்னதான் முயற்சி எடுத்தாலும் மோடியால் நாட்டை பிளவு படுத்த முடியாது. மோடிதான் நிலைகுலைந்து போவார். இந்த நாடு நிலைகுலையாது. நாட்டை பிளவுபடுத்த அப்துல்லா குடும்பம் முயற்சிப்பதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். நாட்டை பிளவுப்படுத்த நாங்கள் நினைத்திருந்தால், இந்தியாவே இருந்திருக்காது.

ரப்பர் குண்டுகள் மூலமும், தேசிய நெடுஞ்சாலைகளை அடைத்தும், அநீதி இழைத்தும் மக்களின் இதயங்களை நீங்கள் வெல்ல முடியாது. ஜாலியன் வாலாபாக்கில்  போராடியது காஷ்மீரின் பாராமுல்லா பகுதியைச் சேர்ந்த சைபுதீன் கிச்லூ. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்டனர். அவர்களை எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்தீர்களா? நீங்கள் காந்தியை கொன்ற கோட்ஷேவைதான் நினைத்து பார்ப்பீர்கள். அவருக்கு இந்தியாவில் கோயில் கட்டினாலும், நீங்கள் ஒன்றும் சொல்வதிலலை.

காஷ்மீரில் 2014ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.வைச் சேர்ந்த சிலர்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற என்னிடம் வந்து ஆதரவு கேட்டனர். என்னால் ஒன்றும் செய்யமுடியாது என கூறிவிட்டேன். நான் உயிரோடு இருக்கும்வரை மோடிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,National Conference Party ,Modi ,Farooq Abdullah ,country , National Conference Party, Producer, Farooq Abdullah, retaliated
× RELATED மன்மோகன்சிங் கண்ணியமானவர் ஆனால் மோடி… உமர்அப்துல்லா விளாசல்