×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல 276 குழுக்கள்: பாதுகாப்பு பணியில் 7 கம்பெனி துணை ராணுவம்

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல சென்னை மாவட்டத்தில் 276 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 7 கம்ெபனி துணை ராணுவம் மற்றும் மாநில காவல் துறையைச் ேசர்ந்த 15 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.இந்நிலையில் வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும்  இவிஎம் இயந்திரங்களை கொண்டு செல்ல 276 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் இவிஎம் இயந்திரங்கள் ஏற்படும் பழுதை நீக்கும் பெல் நிறுவன பொறியாளர், மாநில காவல் துறையை சேர்ந்த ஒரு காவலர், துணை ராணுவத்தை சேர்ந்த ஒரு காவலர், மாநகராட்சி அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 4 பேர் இருப்பார்கள். இந்த ஒவ்வொரு குழுவும் 10 முதல் 15 வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம், விவிபேட் இயந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடும்.

இவிஎம் இயந்திரங்கள் எந்த வழியாக கொண்டு செல்லப்படுகின்றன என்பது உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் இந்த குழுக்களுக்கு மட்டுமே தெரியும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணியிலும் இந்த குழுதான் ஈடுபடும். வாக்குப்பதிவு நாளன்று மொத்தம் 7 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 4 கம்பெனிகள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதம் உள்ள 3 கம்பெனிகள் இன்றுக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதை தவிர்த்து மாநில காவல் துறையைச் சேர்ந்த 15 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : groups ,polling stations ,company subcommittee , Electronic voting machines, voting machines, security work
× RELATED தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள்...