×

தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு; அஸ்வின் ‘அவுட்’ உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக்,  விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.ஐசிசியின் 12வது ஒருநாள் உலக கோப்பை போட்டி  இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந் ்நிலையில் உலக கோப்பைக்கான  15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் சம அளவில் வாய்ப்பு   அளிக்கப்பட்டுள்ளது.தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அணியில் 2வது விக்கெட் கீப்பராக இடம் பெறப்போவது  இளம் வீரர் ரிஷப் பண்ட்டா, அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்காக என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. தினேஷ் கார்த்திக் 2வது முறையாக உலக கோப்பை  அணியில் இடம் பெற்றுள்ளார்.

அதேபோல் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்பாதி ராயுடு,  கலீல் அகமது, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அணியில் டோனி, தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல்  என 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர். விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா என 4 ஆல் ரவுண்டர்கள் உள்ளனர்.டோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, தவான், ஜடேஜா, ஷமி ஆகியோர் ஏற்கனவே உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். தினேஷ் ஏற்கனவே 2007 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.  ஆனால் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் புவனேஷ்வர் குமார் ஏற்கனவே 2015 உலக கோப்பைக்கு தேர்வானார். ஆனால் காயம் காரணமாக அணியில் இருந்து விலக நேர்ந்தது. இவர்களை தவிர  மற்றவர்கள் முதல் முறையாக உலக கோப்பையில் களம் காண உள்ளனர்.2015ல் இன்; 2019ல் அவுட்: ரவிசந்திரன் அஸ்வின், மோகித் சர்மா, இஷாந்த் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, அக்சர் பட்டேல், சுரேஷ் ரெய்னா, அஜிங்கிய ரஹானே, அம்பாதி ராயுடு, உமேஷ் யாதவ்.

ஏன் விஜய் சங்கர்?
பிசிசிஐயின் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ‘ஐபிஎல் போட்டியை கருத்தில் கொண்டு வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஓராண்டாக சாம்பியன் கோப்பை முதல் வெளிநாடுகளில் நடைப்பெற்ற போட்டிகளில்  வீரர்களின் செயல்பாடுகளை பொறுத்தே அணி முடிவு செய்யப்பட்டுள்ளது. ராயுடுவுக்கு போதுமான வாய்ப்புகள் அளித்தோம். ஆனால் விஜய் சங்கர்  பேட்டிங், பந்துவீச்சில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார்.  அவர் 4வதாக களம் இறங்கலாம். லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களம் காணுவார்.அணியில் 7 பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் கலீல் அகமது அல்லது நவ்தீப் சைனி ஆகியோரில் ஒருவர்  இங்கிலாந்து செல்வார்கள். நடுவரிசை பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக தினேஷ் கார்த்திக் மட்டுமின்றி ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ் பாண்டே ஆகியோரையும் கவனித்து வந்தோம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Dinesh Karthik ,Vijay Shankar Asin ,World Cup , Tamil Nadu,Dinesh Karthik, Vijay Shankar ,' Indian team , World Cup
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...