×

அந்தாளு மண்டை குழம்பியவர் பொது இடத்தில் பாஜ எம்எல்ஏக்கள் ஒருவருக்கு ஒருவர் ‘பாராட்டு’

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது. கான்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏ குன்வார் பிரனவ் சிங் சாம்பியன், இதேபோல் ஜாபிரிடா தொகுதி பாஜ எம்எல்ஏ தேஸ்ரான் கர்னவால். எம்எல்ஏ  பிரனவ் மல்யுத்த வீரர். எம்எல்ஏ தேஸ்ரானும் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் சிறந்தவர் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இவை பொய் என்று தெரிந்த நிலையில் பிரனவ், தன்னுடன் மல்யுத்த போட்டி செய்யும்படி எம்எல்ஏ  தேஸ்ரானுக்கு சவால் விடுத்தார். ரூர்கி மைதானத்தில் போட்டிக்காக பிரனவ் வந்துவிட்ட நிலையில் தேஸ்ரான் வரவில்லை.

இதனையடுத்து பேசிய எம்எல்எ பிரனவ், ேதஸ்ரானால் ஒரு கன்னத்தில் அறையை விட்டால் கூட அவரால் தாங்க முடியாது. அந்த அளவுக்கு வலிமை குன்றியவர் என்று கூறி விமர்சித்தார். இதற்கு பதிலளித்த தேஸ்ரான், இது ஆயுதங்கள் பயன்படுத்தும் காலம். மல்யுத்தத்திற்கானது இல்லை. அவர் தனது புத்தியை இழந்துவிட்டதால் மல்யுத்தம் குறித்து பேசுகிறார். அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்  விடுதியில்தான் கொண்டு சென்று விட வேண்டும்” என்றார். இந்நிலையில் பொது இடத்தில் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வார்த்தை மோதலில் ஈடுபட்டது தொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதேஷ் பாஜ தலைவர்  அஜய் பாட் கூறுகையில், “ஒழுக்கம் தான் கட்சியின் மிகப்பெரிய மதிப்பு. அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andalla ,messenger ,BJP MLAs , skull,public , BJP MLAs,'Commendation'
× RELATED பாஜவை நம்பி மோசம்போன தமாகா நாடாளுமன்ற...