×

முதல்வர் பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த இளம்பெண்:போலீஸ் கெடுபிடியால் மருத்துவமனை செல்வதில் தாமதம்

காங்கயம்: காங்கயம் பஸ் நிலையம் முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசாரத்தில் வெகு நேரமாக வெயிலில் காத்திருந்த இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து காங்கயம் பேருந்து நிலையம் முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக மதியம் 2 மணியில் இருந்து பிரசாரம் நடக்கும் இடத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஒருமணிநேரத்தில் நீங்கள் திரும்ப சென்று விடலாம் என தெரிவித்து ஆட்களை அழைத்து வந்து காத்திருக்க வைத்தனர். தொண்டர்கள் முதல்வரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், முதல்வர் தாமதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை 5.30 மணியளவில் காங்கயம் வந்து தனது பேச்சை துவக்கினார்.அப்போது, மதியம் 2 மணியில் இருந்து வெயிலில் காத்திருந்த இளம்பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

சில அடி தூரத்தில் அரசு மருத்துவமனை இருந்தாலும், அவரைத் தூக்கிக் கொண்டு போவதற்கு கட்சியினர் யாரும் முயற்சிக்கவில்லை. காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அந்தப் பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்த போது, அந்தப்பெண்ணால் குடிக்க முடியவில்லை. மயங்கிய பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி செல்வதற்கு முதல்வரின் கான்வாய் செல்லும் வழியில் போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.இதனால் வேறு வழியின்றி கூட்டத்துக்கு நடுவில் அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று ஒருவழியாக மருத்துவமனையில் சேர்த்தனர். முதல்வரின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chief minister ,premises ,departure ,hospital , Chief Minister's campaign, a fallen young woman, hospital
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...