×

8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதுதான் எங்கள் வேலை மத்திய அரசு மீது பழி போடும் எடப்பாடி: காங்கயம் பிரசாரத்தில் பரபரப்பு பேச்சு

காங்கயம்: எட்டு வழிச்சாலை மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். நிலத்தை எடுத்துகொடுப்பது மட்டும் தான்  மாநில அரசின் வேலை என காங்கயம் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் நடந்த அதிமுக கூட்டணி பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்சி, 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றிேய தீருவோம், இது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கனவு திட்டம் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நிதின்கட்கரியின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு ெதரிவிக்காமல் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு மீது பழி போட்டு பேசியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க வேட்பாளர் வெங்குமணிமாறனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை காங்கயம் பஸ்நிலைய ரவுண்டானா அருகில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.   கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதி மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வந்தது தான் எட்டு வழிச்சாலை திட்டம். நிலத்தை எடுத்து கொடுப்பது மட்டும் தான்  மாநில அரசின் வேலை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை கேட்கின்றனர். அதற்காக நிலங்களை எடுத்து தான் ஆகவேண்டும், நிலத்தையும் எடுக்க கூடாது, சாலையும் கூடாது என்றால் எப்படி முடியும். விவசாயிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் போது மூன்று மடங்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

தென்னை மரத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.48 லட்சம் வழங்க மத்திய அரசு தயாராய் இருக்கிறது. தற்போதைய முறையில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை. காங்கயம் காளைக்கு காங்கேயம் பகுதியில் சிலை அமைக்கப்படும். பிரமாண்டமாக சிலை அமைத்து அதனை நானே திறந்து வைப்பேன். விவசாயிகள் நலனுக்காக சென்னையில் ரூ. 2 ஆயிரம் கோடியில் உணவுப்பூங்கா அமைக்கப்படும். ஆன்லைன் மூலம் தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்யலாம். நிதின் கட்கரி கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உறுதியளித்துள்ளார். கோதாவரி, காவிரி நதிகளை இணைத்து அதன் மூலம் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

போராட்டத்தை கொச்சைப்படுத்திய மத்திய அமைச்சர்: நாகர்கோவிலில் நேற்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : பிரதமர் மோடி எப்படி செயல்படுகிறார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெளிவாக குறிப்பிட்டு உள்ளார். எந்த வளர்ச்சி வந்தாலும் அந்த மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அதை சார்ந்து நடக்கும் என்று தான் கூறி இருக்கிறார். மக்களிடம் விரும்பும் போது யாரும் எதையும் தடை செய்ய முடியாது. தூண்டுதலின் பேரில் எதிர்ப்பு இருக்கிறது என்பது வேறு விஷயம். நான் அதிகமாக இந்த விஷயத்துக்குள் செல்ல விரும்பவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

தங்கள் விவசாய நிலங்களை காப்பாற்றுவதற்காக தன்னெழுச்சியாக போராடி வரும் விவசாயிகளை, தூண்டுதலின் பேரில் போராட்டம் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ெகாச்ைசப்படுத்தியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land ,pedestrians , Eight Tracts, Central Government, Edattadi Palinasamy
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!