×

அனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அனைத்து ரயில் நிலையங்களிலும் நடப்பாண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ரயில்வே ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே டிஜிபி, ஐ.ஜி, ரயில்வே தொழிற்சங்கத்தை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்தது நீதிமன்றம். வழக்கு விசாரணையின் போது தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் மிஸ்ரா உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார். தெற்கு ரயில்வேயில் 4500 ஊழியர்கள் முன்னறிவிப்பு ஏதும் செய்யாமல் பணிக்கு வராமல் உள்ளனர் என்று ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தர 182 என்ற எண்ணை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,railway stations , Court, order, cctv, cameras, train
× RELATED 78 ரயில்வே காவல் நிலையங்களில் சென்சார் முறையில் கைகழுவும் வாஷ்பேஷின்கள்