×

பேராசிரியை நிர்மலாதேவி...ஏப்ரல் 22ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி ஏப்ரல் 22ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு சுமார் 11 மாதங்களுக்கு பிறகு மார்ச் மாதம் 11ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தர கூடாது என நிர்மலாதேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை விதித்த ஜாமின் வழங்கியது. இந்த நிலையில், வார இதழ் ஒன்றில் நிர்மலாதேவி பேசியதாக கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சாராம்சங்கள் இந்த வழக்கின் விசாரணையை மாற்றக்கூடியதாக உள்ளது.

எனவே, இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் கூறி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, வரும் 22ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதிகள் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நிர்மலாதேவி வாக்குமூலம் மற்றும் கட்டுரையில் வெளியாகியுள்ள தகவலில் வேறுபாடுகள் உள்ள காரணத்தால், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சில விளக்கங்களை பெற நிர்மலாதேவி ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi , Professor Nirmaladevi, appear in person , High Court Branch
× RELATED பேராசிரியை நிர்மலாதேவிக்காக ஆஜராகி...