×

கேரளாவில் கம்பம் பள்ளத்தாக்கு வைக்கோலுக்கு கிராக்கி : விவசாயிகள் மகிழ்ச்சி

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் வயல்களில் இருந்து தினந்தோறும் கேரளாவிற்கு ஏராளமான வைக்கோல் கொண்டு செல்லப்படுவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரியாறு அணையின் மூலம் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் இருந்து இரண்டாம் போக நெல் அறுவடை செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இவை தவிர கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் அறுவடை நடைபெற்று முடிவுறும் தருவாயில் உள்ளது. தேனிமாவட்டத்தின் உபதொழிலாக கால்நடை வளர்ப்பு இருப்பதால் இயற்கை தீவனங்களுடன், வைக்கோலும் கொள்முதல் செய்து வைப்பது வழக்கம். இதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிகளவில் வைக்கோல் செல்வது வழக்கமாக உள்ளது.

ஒரு ஏக்கரில் நெல் பயிரிடப்பட்ட வயல்களில் வைக்கோல் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. இதனை முன்பெல்லாம் வாங்குவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால், தற்போது கேரளா வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனை மிக ஆர்வத்துடன் கொள்முதல் செய்கின்றனர். 1 ஏக்கர் வைக்கோல் ரூ.3500 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மதுரை, சிவகங்கை, திருச்சி, மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி, திருவனந்தபுரம் வியாபாரிகள் இங்கு வந்து வைக்கோலை மொத்தமாக கொள்முதல் செய்வதால் வைக்கோல் கிடைப்பதில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, இடுக்கி மற்றும் தமிழகத்தின் உள்புற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வைக்கோல் கொள்முதல் செய்ய தேனிக்கு வருகின்றனர். இதனால் 1 ஏக்கர் விலை ரூ.1000 வரை கூடி உள்ளது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala , Kerala, hay, farmers
× RELATED கேரளாவில் பெண் பலி